மதுபான கொள்கை முறைகேடு.! ஆம் ஆத்மி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.!
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் புதிய மதுபான கொள்கை அறிமுகபடுப்படுத்தப்பட்டது. இதன்பெயரில் அரசாங்கத்திடம் இருந்த மதிப்பான விற்பனை தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 849 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்ப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது.
இந்த புதிய மதுபான கொள்கை மூலம் அரசுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லி காலால் துறை முன்னாள் அமைச்சரும், முன்னாள் டெல்லி முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்து தற்போது வரை டெல்லி சிறையில் விசாரணையில் இருக்கிறார். ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது இல்லம் தவிர்த்து மேலும் சில இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.