நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி!

Arvind Kejriwal

டெல்லி அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும், அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டி வந்தார்.

இதனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழல் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது இது இரண்டாவது முறையாகும்.

அந்தவகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

டெல்லி நேரு மைதானத்தில் தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். அதன்படி, ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவான நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் சிறையில் உள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் தனிப்பட்ட காரணங்களால் சபைக்கு வரவில்லை எனவும் தகவல் கூறப்படுகிறது. இன்று டெல்லி சபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறது.

என்னை கைது செய்ய பாஜக விரும்புகிறது. என்னை கைது செய்யலாம், எனது எண்ணங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாட்டின் 3வது கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்எல்ஏக்கள் கூட பிரிந்து செல்லவில்லை. பாஜக யாருக்காவது பயந்தால் அது ஆம் ஆத்மிதான்.

எனவே, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தோற்கவில்லை என்றால், 2029இல் இந்தியாவை பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி விடுவிக்கும் என்றும் பாஜக இல்லாத நாட்டை ஆம் ஆத்மி உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்