மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

Sushil Kumar Rinku

ஜலந்தர் மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுஷில் ரிங்கு, காங்கிரஸ் வேட்பாளருமான கரம்ஜித் கவுர் சவுத்ரியை 58,691 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இடைத்தேர்தலில் சுஷில் குமார் ரிங்கு 3,02,279 வாக்குகளும், சவுத்ரி 2,43,588 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவில் காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி இறந்ததை அடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மே 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுரும், பாஜக வேட்பாளராக இந்தர் இக்பால் அத்வால் போட்டியிட்டனர்.

SAD-BSP பங்கா எம்எல்ஏ டாக்டர் சுக்விந்தர் குமார் சுகியை வேட்பாளராக நிறுத்தியது. இந்த நிலையில், ஜலந்தர் மக்களவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். காங்கிரஸ் 2வது இடமும், சிரோன்மனி அகாலிதள வேட்பாளர் 3வது இடமும் பிடித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்