#Breaking : எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி ஆதரவு.!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
அதற்காக ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
பாஜக தங்கள் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் ஜார்கண்ட் கவர்னர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல எதிர்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதில் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியை வைத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டனர்.
திரௌபதி முர்மு மீது மரியாதை இருக்கிறது. இருந்தாலும் எங்களது ஆதரவு யஷ்வந்த் சின்ஹாவுக்கு தான் என ஆம் ஆத்மி ஆதரவு என அறிவித்துள்ளனர். இது அரசியல் களத்தில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.