சட்டவிரோதமாக செயல்படவே டெல்லி காலால் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.! ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றசாட்டு.!
சட்ட விரோதமாக நிதியை உருவாக்கவே டெல்லியில் புதிய கலால் கொள்கையை ஆம் ஆத்மி தலைவர்கள் பயன்படுத்தினர். – அமலாகத்துறையினர் குற்றசாட்டு.
கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசால் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தபட்டது. அதன்படி டெல்லி பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதில் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இந்த புதிய மதுபான கொள்கை டெல்லி அரசால் திரும்ப பெறப்பட்டது.
இந்த மதுபானக்கொள்கையில் முறைகள் நடந்திருப்பதாக கூறி டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா உட்பட பலர் மீது சிபிஐ-ஆல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறையினரின் குற்றச்சாட்டு மீதான விசாரணை டெல்லி உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (புதன்கிழமை) நடந்த விசாரணையின் போது சட்ட விரோதமாக நிதியை உருவாக்கவே டெல்லியில் புதிய கலால் கொள்கையை ஆம் ஆத்மி தலைவர்கள் பயன்படுத்தினர். என அமலாக்க துறையினர் குற்றம் சாட்டினர்.
மேலும் , இந்த கொள்கையானது வேண்டுமென்றே பல்வேறு ஓட்டைகளுடன் உருவாக்கப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காகவே இந்த ஓட்டைகள் உருவாக்கப்பட்டு இருந்தது என்றும் அமலாகத்துறையினர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.