Categories: இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

2024 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் முன்னணி தலைவர் அறிவிப்பு.

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் முன்னணி தலைவர் சந்தீப் பாதக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், 2024 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து “மகா ஜோதா” என்ற கூட்டணியை அமைப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஆம் ஆத்மி தனித்து போட்டி என்ற அறிவிப்பு வந்துள்ளது, கூட்டணி முறிகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் முடிவு பாஜவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

அதுவும், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொண்ட 4 நாட்களுக்குப் பிறகு, அக்கட்சியின் முன்னணி தலைவர் சந்தீப் பதக், 2024 லோக்சபா தேர்தல் உட்பட வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று சந்தீப் பாதக் கூறியுள்ளார். மேலும் சந்தீப் பாதக் கூறுகையில், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆதரவைத் திரட்டவே பாட்னா கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்துகொண்டது.

சிம்லாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. அரசுச் சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டால் நாங்கள் எந்தக் கூட்டத்திற்கும் செல்வோம்  என்றும் மத்திய பாஜக அரசு நாட்டை “அழிக்கிறது” எனவும் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். பின்னர் கூட்டம் முடிந்த பிறகு, எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பின்போது, அர்விந்த் கெஜ்ரிவால் புறப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

39 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

43 minutes ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

2 hours ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

2 hours ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

3 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

4 hours ago