ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல்.!

டெல்லியில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் அமல்படுத்தியது. இதன்படி, டெல்லியில் மதுபான விற்பனையானது மாநில அரசிடம் இருந்து தனியார் வசம் கொடுக்கப்பட்டது. அதன்படி 800க்கும் மேற்பட்ட மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திடீரென இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது.
இந்த மதுபான கொள்கை மூலம் அரசுக்கு 2800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. அதன் பெயரில் தினேஷ் அரோரா வை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்
அவரிடம் நடத்திய விசாரணையில் இருந்து இதுவரை 200க்கும் அதிகமானோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக நேற்று கைது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கிற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரியது. பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதன் பெயரில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று சஞ்சய் சிங்கிற்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.