டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. அதுவும் வருகின்ற 16-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது . இந்த நிலையில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை நேற்று காலை முதல் 22 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிகையில், தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து, இறுதியில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் டெல்லி கோட்டையை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் நரேஷ் யாதவ், 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர், நேற்றிரவு ( செவ்வாக்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது கிஷன்கார்க் பகுதி வழியே அவரது வாகனம் சென்றுகொண்டிருந்த போது, சில மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிசூட்டில் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருடன் வந்த ஆம் அத்மி தொண்டர் அசோக் மான் என்பவர் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில், அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடன் வந்த மற்றோரு தொண்டருக்கும் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டெல்லி எம்.எல்.ஏ-வின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிஷான்கார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…