இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா” கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இதனை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது,ஒருவர் பெயர் பல இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைய ஆலோசனை படி தேர்தல் சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி,வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமை அளிக்கும் பொருட்டு மனைவி என்ற சொல்லுக்கு பதில் துணைவர் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,ஆண் அல்லது பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால்,தொலைதூரத்தில் பணியாற்றினால் அவருக்கு பதில் கணவர் அல்லது மனைவி வாக்களிக்க முடியும்.
மேலும்,18 வயது நிறைவடைந்தவர்கள் ஆண்டுதோறும் 4 முறை தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அந்த வகையில்,ஜனவரி 1,ஏப்ரல் 1,ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…