வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ இணைப்பு – மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Default Image

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இருப்பினும்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா”  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இதனை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது,ஒருவர் பெயர் பல இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைய ஆலோசனை படி தேர்தல் சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி,வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமை அளிக்கும் பொருட்டு மனைவி என்ற சொல்லுக்கு பதில் துணைவர் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,ஆண் அல்லது பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால்,தொலைதூரத்தில் பணியாற்றினால் அவருக்கு பதில் கணவர் அல்லது மனைவி வாக்களிக்க முடியும்.

மேலும்,18 வயது நிறைவடைந்தவர்கள் ஆண்டுதோறும் 4 முறை தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அந்த வகையில்,ஜனவரி 1,ஏப்ரல் 1,ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்