சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார், பான் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது!
- சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதால் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என மனு போடப்பட்டிருந்தது.
- ஆதார் எண் , பான் எண்ணை சமூக வலைதள பக்கங்களில் இணைக்க உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன என கூறி அதனால் பயனர்கள் சமூக வலைதளபக்கங்களுடன் ஆதார் பான் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி டி.என் படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு , ‘ இந்த வழக்கில் அனைத்து சமூக வலைதள பக்கங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது. அது உண்மையாக கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு எளிதாக சென்றுவிட முடியும். உண்மையாக பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
எங்கள் கடமை சட்டத்தை விளக்குவது மட்டுமே. சட்டம் எப்படி இருக்க வேண்டும் என கூறுவது இல்லை. என்பனவாறு தெரிவித்துள்ளார்.
இதில் , மனு அளித்திருந்த பாஜக பிரமுகர் அஷ்வினிகுமார் உத்பயா அந்த மனுவில், ‘ 20 சதவீதம் பேர் போலி கணக்குகளை உபயோகப்படுத்திக்கின்றனர். அதன் மூலம் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆதலால் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் சமூக வலைதள பக்கங்களோடு இணைக்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது.