#Justnow:வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ இணைப்பு – தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இருப்பினும்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா”  கடந்த டிசம்பர் மக்களவையில் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இதனை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதற்கான விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஓய்வு பெரும் நிலையில், நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:”ஆதார் விவரங்களைப் பகிர்வது வாக்காளர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்,ஆனால் அவ்வாறு செய்யாதவர்கள் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும்,ஆதார் எண்ணைப் பகிர்வது வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உதவும்.குறிப்பாக,வாக்காளரைப் பற்றி இன்னும் தெளிவான விவரங்கள் தெரிந்தால்,தேர்தல் எப்போது நடைபெறும்,அவர்களின் தொலைபேசி எண்களில் பூத் (விவரங்கள்) போன்ற பல சேவைகளை நாங்கள் வழங்க முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே,தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில்,இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.அதன்படி,ராஜீவ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று (மே 15 ஆம் தேதி) முதல் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

8 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

9 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago