உ.பியில் ரயிலில் செல்போன் திருடியதால் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று உத்திர பிரதேசத்தில் டெல்லிக்கு செல்லும் அயோத்தி கான்ட் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு இளைஞர் பயணியிடம் செல்போனை திருடியதாக தாக்கப்பட்டு ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சக பயணியிடம் இருந்து அந்த இளைஞர் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த இளைஞரை சக பயணிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த இளைஞர் கெஞ்சிய நிலையிலும் அவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளார்.
இதில் ஷாஜஹான்பூரில் உள்ள தில்ஹர் ரயில் நிலையம் அருகே உள்ள கம்பத்தில் அடித்து பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்தார். இது சமபந்தமான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளைஞரை தாக்கி, தூக்கி எரிந்ததாக நரேந்திர துபே என்பவரை உத்திர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…