போதை பழக்க மீட்பு மையத்தில் அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.! மேலாளர் உட்பட 7 பேர் கைது.!
குஜராத்தில் போதை ஒழிப்பு மையத்தில், போதைப் பழக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞரை அடித்துக் கொன்ற இரக்கமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போதை ஒழிப்பு மையத்தில் அனுமதி :
குஜராத்தின் சூரத்தில் உள்ள ஜியோனா போதை ஒழிப்பு மையத்தில் போதை பழக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞரை மையத்தின் இயக்குனர் உட்பட 7 பேர் அடித்துக் கொன்றுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தை தளமாகக் கொண்ட தொண்டு அறக்கட்டளையால், ஜியோனா போதை ஒழிப்பு மையம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு மெஹ்சானாவைச் சேர்ந்த ஹர்திக் சுதர் என்ற இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது:
கடந்த மாதம் அவர் இறந்ததாகவும், அவரது மரண இயற்கையானது எனவும் போதை ஒழிப்பு மையத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹர்திக் மரணத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் மெகுல் படேல் விசாரணை நடத்தினர். அவர் நடத்திய விசாரணையில் போதை ஒழிப்பு மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஹர்திக் சுதர் மரணம் :
இது குறித்து காவல் ஆய்வாளர் மெகுல் படேல் கூறுகையில், “ஹர்திக் சுதர் குளியலறைக்குச் சென்று தனது மணிக்கட்டை வெட்ட முயன்றுள்ளார். அதனால் மேலாளர் சந்தீப் படேல் உட்பட 7 பேர் சுதரின் கைகளையும் கால்களையும் கட்டி, ஒருவர் அவரை தலைகீழாக பிடித்துள்ளார். பின்னர் தடிமனான பிளாஸ்டிக் பைப்பால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் இறந்துள்ளார்” என்று கூறினார்.
கைது நடவடிக்கை :
“இவர்களில் இருவர் குழாயின் ஒரு பகுதியை லைட்டரால் எரித்து, சூடான திரவத்தை சுதாரின் அந்தரங்க பாகங்களில் ஊற்றி அவரது அந்தரங்க முடியை எரித்தாகவும், மற்ற நோயாளிகள் எவரேனும் இது போன்று முடிவுகள் எடுத்தால் அவர்களுக்கும் அதே கதி ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டதாகவும்” மெகுல் படேல் மேலும் கூறினார். இதையடுத்து மேலாளர் சந்தீப் படேல் உட்பட இதில் சம்பந்தப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.