காதலன் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..! காரணம் இதுதான்..!
காதலன் அடித்ததால் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புனேவில் காதலன் அடித்ததால் அந்தோணி ஜேசுதாசன் என்ற 21 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புனேவில் உள்ள விமான் நகரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் அந்தோணி ஜேசுதாசனை, அவரது காதலனான சாய்ராஜ் நண்பர்கள் முன்னிலையில் செல்போனை பறித்து அடித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதிய தற்கொலை தனது காதலன் தன்னை வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து அடித்ததாகவும், பெண்ணின் தோழி தன்னை சிகரெட் மற்றும் மரிஜுவானாவுக்கு அடிமையாக்கியதாகவும் எழுதியிருந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் காதலன் மற்றும் பெண்ணின் தோழியை கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.