சனி, ஞாயிறுகளில் மட்டும் கடிக்கும் பாம்புகள்.. 6 முறை கடித்தும் உயிருடன் இருக்கும் இளைஞர்.!

Uttar Pradesh - snakes

உத்தரபிரதேசம் : ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை கடந்த 35 நாட்களில் 6 முறை பாம்பு கடித்துள்ளது. ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிக்கும் போது, ​​அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு, அவர் மருத்துவமனையையில் வீடு திரும்புகிறார்.

தனது வீட்டில் பாம்பு கடிப்பதால் அத்தை வீட்டுக்கு சென்றாலும், அங்கும் பாம்பு கடித்ததாக தூபே வேதனை. அதுமட்டுமன்றி பாம்பு கடிக்க வருவதை தான் முன்கூட்டியே உணர்வதாகவும், சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே தன்னை பாம்பு கடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் பாம்பு கடிச் சம்பவம் ஜூன் 2 அன்று அவரது வீட்டில் படுக்கையில் இருந்து எழுந்த பிறகு அரங்கேரியுள்ளது. பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2 முதல் ஜூலை 6 வரை, அந்த இளைஞர் ஆறு முறை பாம்புகளால் தாக்கப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

மேலும், நான்காவது முறையாக பாம்பு கடித்த பிறகு, அந்த இளைஞர் (துபே) தனது வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, அவர் ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கேயும் அவர் ஐந்தாவது முறையாக மீண்டும் பாம்பு கடித்துள்ளது.

உடனே, துபேயின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்ததும் நிம்மதி என்று நினைத்தால், ஜூலை 6 ஆம் தேதி, அவர் மீண்டும் தனது வீட்டில் ஒரு பாம்பால் தாக்கப்பட்டார். மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார், இந்த தகவல் அறிந்த நெட்டிசன்கள் இவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்