jharkhand [File Image]
சென்னை : ரீல்ஸ் செய்ய நினைத்து 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளைஞன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்ய உயரத்தில் இருந்து ஆழமான நீரில் குதித்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தௌசிப் என்ற 18 வயது இளைஞர் 100 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள தண்ணீரில் குதித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட நினைத்துள்ளார்.
எனவே, கடந்த திங்கள்கிழமை மாலை சுமார் 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்துள்ளார். அதனை அக்கம் பக்கத்தில் இருந்த அவருடைய நண்பர்களும் வீடியோ எடுத்தனர். அப்போது, தண்ணீரில் விழுந்து அவர் நீந்தத் தொடங்கியவுடன், மெது மெதுவாக அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார். எனவே இதனால் மூச்சி திணறி இளைஞன் உயிரிழந்தார்.
இதனை பார்த்த ஏரியில் குளித்துக் கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை, உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின் அவருடைய சடலம் மீட்கப்பட்டது.
சடலத்தை மீட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் குமார் குஷ்வாஹா கூறுகையில், “பல அடி ஆழமான தண்ணீரில் குதித்த அந்த இளைஞன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ரீல்ஸ் செய்ய நினைத்து 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…