29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய இளம்பெண்..! அதிரடியான ஆலோசனை வழங்கிய உச்சநீதிமன்றம்..!
29 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய பெண்ணுக்கு உதவிய நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தில் திருமணம் ஆகாத 20 வயது பெண் ஒருவர் தனது கருவில் வளரும் 29 வார சிசுவை கலைக்க அனுமதி கோரி நாடி இருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் மற்றும் நீதிபதிகள் வி ராமசுப்பிரமணியம், பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் உயிருக்கு எந்தவித ஆபத்து ஏற்படாமல் கருவை கலைப்பதற்கு முடியுமா என ஆராய்வதற்காக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு மருத்துவ குழுவை அமைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தக் குழு கடந்த ஜனவரி 20ஆம் தேதி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தால் குழந்தை உயிருடன் பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மனுதாரர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள உளவியல் மருத்துவரை அணுக வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம் மனுதாரரை தொடர்பு கொண்டு அவருக்கு உரிய ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது ஐஸ்வர்யாபதி மற்றும் மருத்துவர் அமித் மிஸ்ரா ஆகியோர் மனுதாரரை சந்தித்து அவருக்கு ஆலோசனை வழங்கினர்.
நீதிமன்றத்தில் சுருக்கமாக வாதிட்ட மிஸ்ரா, மனுதாரரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறினார், ஏனெனில் அவர் கர்ப்பம் தரிந்ததிலிருந்து கல்லூரிக்குச் செல்வதை நிறுத்தினார். அவள் வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள் என தெரிவித்தார். ஆலோசனைக்கு பின் அப்பெண் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குழந்தையை விரைவில் பெற்று எடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதனை எடுத்து தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் குழந்தையை குழந்தையை பெற்றெடுக்க விரைவாக ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனையிடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பெண்ணுக்கு ஆலோசனை வழங்கிய கூடுதல் சொல்லிவிட்டார் ஐஸ்வர்யாபதி மற்றும் மருத்துவர் அமித் மிஸ்ராவிடம் அப்பெண் தனக்கு பிறக்கும் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொள்வதற்கு விருப்பம் இல்லை என்றும் மனுதாரரின் தந்தை கொரோனா தொற்றுக்கு பலியாகி விட்டதாகவும், தாயார் உடல்நிலை சரியில்லாதவர் அவரது சகோதரி திருமணம் ஆகி விட்டதால் தனக்கு குழந்தை வளர்க்கும் சூழல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் குழந்தை தத்தெடுப்பு நல ஆணையத்தில் குழந்தை தத்தெடுக்க விரும்பி பதிவு செய்திருக்கும் பெற்றோர்களை குழந்தை தத்தெடுக்க தயாராக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தத்தெடுப்பு சம்பந்தமாக, CARA வருங்கால தம்பதிகளின் “வீட்டு ஆய்வு” நடத்தியதாகவும், அவர்கள் பொருத்தமானவர்கள் எனக் கண்டறிந்ததாகவும் பதி கூறினார். 0-2 மாத வயதுடைய குழந்தையை தத்தெடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. மேலும், தத்தெடுக்கும் பெற்றோரின் பதிவு விவரங்களைக் குறிப்பிடுவதை நீதிமன்றம் தடை செய்தது.
இந்த வழக்கில் இரண்டு வழிமுறைகளை நீதிமன்றம் வகுத்திருந்தது. அதன்படி மனுதாரரின் பிரசவத்திற்கு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது. அவருக்கு பிரசவம் பாதுகாப்பான முறையில் நிகழ வேண்டும்.இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை உதவி செய்ய வேண்டும் என்றும் அவரது தனி உரிமை பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பெண் குறித்த எந்தவித அடையாளமும் வெளியே தெரியக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தை தத்தெடுக்க பதிவு செய்தவர்களுக்கு தத்தெடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் குழந்தைகள் தத்தெடுப்பு நல ஆணையம் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.