கேரளாவில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட 20 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கேரள மாநிலம், காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற 20 வயது இளம்பெண் டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் ஆன்லைனில் பிரியாணி வகையை சேர்ந்த ‘குழிமந்தி’ என்ற உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, அங்கிருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உணவு விஷம் கலந்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஹோட்டல்களின் உரிமம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (FSSA) கீழ் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…