Dr Ruwais - Dr Shahana [Image source : India Today]
எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் .
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் 26 வயதான டாக்டர் ஷஹானா. இவரும் டாக்டர் ஈஏ ருவைஸும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது . இருவர் வீட்டிலும் இந்த விஷயம் தெரிந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து வந்துள்ளனர்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்… ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் நான்கு இந்தியர்கள்!
இளம்பெண் மருத்துவர் ஷஹானா தனது தயார் மற்றும் தனத 2 உடன்பிறப்புகளோடு வாழந்து வந்துள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். டாக்டர் ஈஏ ருவைஸ் வீட்டார், ஷஹானா வீட்டாரிடம் , 150 சவரன் தங்க நகை, 15 ஏக்கர் நிலம் ஒரு BMW கார் ஆகியவற்றை வரதட்சணையாக தர வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இதனை கொடுக்க இயலாது என பெண் வீட்டார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்து இந்த திருமணம் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பெண் மருத்துவர் ஷஹானா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சடலத்தை மீட்கையில் அங்கு ஒரு கடிதத்தில், “அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை” என்று எழுதப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கேரள காவல்துறையினர், டாக்டர் ஈஏ ருவைஸ் மீது, தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஷஹானாவின் மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…