தற்கொலை செய்து கொண்ட தாயின் உடலுடன் இரண்டு நாட்களாக பட்டினியாக கிடந்த பச்சிளம் குழந்தை ….!
தற்கொலை செய்து கொண்ட தாயின் உடலுடன் இரண்டு நாட்களாக பட்டினியாக கிடந்த பச்சிளம் குழந்தை.
டெல்லியில், புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் மாவட்டத்தில் உள்ள ஃபியூஜ் வஸ்தியில் ஒரு வீட்டில், ஒரு வயதிற்கும் குறைவான குழந்தை ஒன்று, இறந்த தன் தாய் தாயின் உடலுடன், பட்டினியாக இரண்டு நாட்கள் இருந்ததுள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சரஸ்வதி ராஜேஷ் குமார் (29) என்ற பெண் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் தினசரி கூலி மற்றும் சில தனிப்பட்ட வேலை தொடர்பாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் தொற்று காரணமாக பயத்தில் இரண்டு நாட்களாக அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை.
மேலும் அக்குழந்தையும் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இறந்த தன் தாயுடன் பட்டினியாகவே கிடந்துள்ளது. இந்த நிலையில் துர்நாற்றம் வீச தொடங்க, அவர் இருந்த வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஷிண்டே அவர்கள் கூறுகையில், இரண்டு நாட்களாக வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த போதுதான் ஏதோ ஒன்று நடந்து விட்டது என்று அந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில், பிறந்து ஒரு வருடங்கள் கூட கழியாத குழந்தை தனது இறந்த தாயுடன் பட்டினியாக இருந்ததை அறிந்த, சுஷிலா கபாலே மற்றும் ரேகா வாஜே ஆகிய இரு கான்ஸ்டபிள்களும் குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் ஊட்டி, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர். அதில் தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் வந்தது. இதனை அடுத்து குழந்தைகள் நல குழுவின் உத்தரவை தொடர்ந்து, காவல்துறையினர் குழந்தையை ஒரு குழந்தைகல் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் அவர் டெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.