சாண்ட்விச்சில் புழு…அலறிய பயணி.! இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை!

IndiGo passenger sandwich issue

இண்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழுவைக் கண்டறிந்த பெண் பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருவதால் உடல் நலம் குறித்த பரபரப்பை கிளப்பியுள்ளது.

உணவியல் நிபுணரும், இன்ஸ்டாகிராம் பயனருமான குஷ்பூ குப்தா என்பவர், இண்டிகோ விமானத்தில பறக்கும் போது தனது அனுபவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், விமானத்தில் பயணம் செய்யும்போது ஆர்டர் செய்த சாண்ட்விச்சில் உயிருள்ள புழு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

பின்னர், இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டனர். இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில், பயணியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்