டெல்லியில் கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்ற இளைஞன் கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொலை சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது. இதனை அடுத்தும் ஒரு சில சம்பவங்கள் இதே போல இந்தியாவில் நடந்தன.
தற்போது மீண்டும் டெல்லியில், அதே போல உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று (புதன்கிழமை) அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.
கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதை அடுத்து டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து டெல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் பணியாளர்கள் உதவியுடன் வாய்க்காலில் இருந்து அந்த சூட்கேஸை வெளியே எடுத்தனர்.
தற்போது அந்த பெண் யார், எப்போது கொலை நடந்தது, யார் கொலையாளி என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…