மரணம் இப்படியும் வருமா! திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு!
மேடையில் சந்தோசமாக புன்னகையுடன், இப்பெண் (23) நடனமாட, அவருக்காக எழுப்பிய கரகோஷங்கள் ஒரே நொடியில் கண்ணீராக மாறிவிட்டன.

ரேவா : மத்தியப் பிரதேசத்தில் தன் உறவினரின் சங்கீத் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பரிநீதா (23) என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்தப் பெண் நடனமாடிக்கொண்டே இருக்கும் பொழுது, கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு பளபளப்பான லெஹங்கா அணிந்த அந்த பெண், மேடையில் நடனமாடுவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். நடனமாடும்போது திடீரென்று அவள் மேடையில் விழுகிறாள், அதன் பின் எழுந்திருக்கவில்லை. இதை பார்க்கும் பொழுது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை என உணர்த்தும் காட்சி இது.
நடனம் ஆடி கொண்டிருக்கையில், திடீரென மயங்கி முகம் குப்புற விழுந்த அவரை, உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றபோதிலும் காப்பாற்ற முடியவில்லையென வேதனையுடன் கதறியுள்ளனர். அந்தப் பெண் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்தூரிலிருந்து விதிஷாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என்று தெரிய வந்துள்ளது.
Lady passed away due to #heartattack during dance performance in Madhya Pradesh’s Vidisha. pic.twitter.com/2qDCSo5dfG
— VARTA (@varta24news) February 10, 2025