தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த பெண் இரண்டே மாதத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தினை சேர்ந்த 35 வயதுடைய பெண் தான் அனுஷியா, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. ஆனால், கடந்த வருடம் இவரது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அனுஷியாவுக்கு தன்னை விட 10 வயது குறைவான இளைஞர் ஹித்தேஷ் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் கடந்த 2 மாதத்துக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு தினத்துக்கு முன்பதாக அனுஷியா கழிவறையில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு ஹித்தேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்து விசாரித்த காவலர்களிடம் ஹித்தேஷ், தூக்கு மாட்டி தற்கொலைக்கு அனுஷியா முயற்சித்துள்ளார் அப்பொழுது கயிறு அவிழ்ந்து விழுந்ததால் காயங்களுடன் கீழே உயிரிழந்து கிடக்கிறார் என கூறியுள்ளார். ஒரு வேலை வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பதால் அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களின் கேலிக்குள்ளாகி ஹித்தேஷ் அனுஷியாவை கொலை செய்திருக்கலாம் என போலிஸாருக்கு ஹித்தேஷ் மீது சந்தேகம் வலுக்கவே அவரை பிடித்து தற்பொழுது விசாரித்து வருகின்றனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…