அமேசானில் ரூ.12,000 மதிப்பு டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்..! டெலிவரியில் காத்திருந்த அதிர்ச்சி..!

Default Image

அமேசானில் ரூ.12,000 மதிப்புள்ள டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண் பெண்ணிற்கு மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகள் வந்துள்ளது.

அண்மை காலமாக ஆன்லைன் விற்பனையாளர்களால் பலதரப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தான் ஆர்டர் செய்த பொருள் ஒன்றாக இருக்கையில் அவர்களது கையில் கிடைக்கக்கூடிய பொருள் மற்றொன்றாக உள்ளது. இதனால் ஏமாற்றமடையும் மக்கள், சம்பந்தப்பட்ட நிறுவ செயலில் பல புகார்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் அமேசான் ஆன்லைன் ஸ்டோரில், எலக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை ஆர்டர் செய்த பெண்ணிற்கு மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகள் வந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Deliveryscam

சமீபத்தில் பெண் ஒருவர் ரூ.12,000 மதிப்புள்ள ஓரல்-பி (Oral-B) எலக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு எம்டிஎச் (MDH) மசாலாவின் நான்கு பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் மகள் அவரது ட்விட்டர் பக்கத்தில் “தனது தாயார் ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டூத் பிரஷ்ஷை ஆர்டர் செய்ததாகவும், பார்சலில் சந்தேகம் வந்ததால் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பு அதைத் திறந்ததாகவும்” கூறினார்.

amazon

அவர் ட்விட்டரில்  மசாலா பெட்டிகளின் புகைப்படத்தை பகிர்ந்து , “அன்புள்ள அமேசான் இந்தியா, ஒரு வருடத்திற்கும் மேலாக பொருட்களை வாங்குபவர்களை ஏமாற்றி வரும் விற்பனையாளரை நீங்கள் ஏன் பணி நீக்கம் செய்யவில்லை?” என்று நிறுவனத்தை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு ஆன்லைன் விற்பனையாளர்களால் ஏமாற்றப்பட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer