டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என பெண் பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்து புகார் அளித்துள்ளார்.
டெல்லியில், முன்னணி பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் பத்திரிக்கையாளர், அண்மையில் டெல்லி, நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து மாளவியா நகரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு உபர் செயலி மூலம் வந்த ஆட்டோவில் பயணித்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் என்பவர் , ஆட்டோவில் பின்பக்கம் வாகனத்தை பார்க்கும் கண்ணாடி மூலம் பெண் பத்திரிக்கையாளர்களின் மார்பகங்களை பார்த்ததாகவும், இதனை அறிந்து, அந்த பெண் இடம் மாறி அமர்ந்தாலும், மீண்டும் அதே போல அந்த ஆட்டோ ஓட்டுநர் மறுபக்க கண்ணாடி மூலம் தனது மார்பகங்களை பார்த்தாக பெண் பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உபேர் செயலி பாதுகாப்பு அம்சத்தை தொடர்பு கொண்டாலும் எந்த பயனும் அளிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் நான் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியபோது, ‘ புகார் அளியுங்கள்’ என ஆட்டோ ஓட்டுநர் கூறியதாகவும் பெண் பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் என்பவர் மீது, இந்திய தண்டனை பிரிவு 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் விதமாக வார்த்தை, சைகை அல்லது செயல் மூலம் நடந்து கொள்வது.) கீழ் டெல்லி காவல் துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆட்டோ ஓட்டுனரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…