ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்ட பெண்! 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சோகம்!
மகாராஷ்டிரா : காரை ரிவர்ஸ் செய்யும் போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பாஜி நகரில் உள்ள ஹனுமன்நகரைச் சேர்ந்த 23 வயதான ஸ்வேதா தீபக் தனது காரை எடுத்துக்கொண்டு சுலிபஞ்சன் மலையில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது ரீல்ஸ் மீது உள்ள ஆர்வத்தில் தன்னுடன் வந்த தனது நன்பர் 25 வயது நண்பர் சூரஜ் சஞ்சாவிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்க சொல்லி கூறியுள்ளார். பின் அவரும் வீடியோவை ஆன் செய்துவிட்டு காரை ஓட்ட கூறியுள்ளார். அப்போது, காரை ரிவல்ஸ் செய்ய முயற்சி செய்து உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுபாட்டை இழந்த நிலையில் விறுவிறுவன பின்னாடி இருந்த 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் அந்த பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது உயிரிழந்தார். கார் விழும்போது வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த அவருடைய நண்பர் காரை நோக்கி ஓடி காப்பாற்றவும் முயற்சி செய்த போதிலும், சர்வேஸ் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. இது தொடர்பான அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
In the madness of reels and selfies, a woman fell straight into a ditch while backing the car. Incident of Chhatrapati Sambhajinagar, Maharashtra. pic.twitter.com/oPhyD4Kfil
— Ravi kawate (@KawateRavi) June 18, 2024
இந்த சம்பவத்தில் வாகனம் கடுமையாக சேதமடைந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டு நண்பர்களும் அவுரங்காபாத்தில் இருந்து சுலிபஞ்சன் ஹில்ஸுக்கு பயணித்ததாகக் கூறப்படுகிறது.