5 பேரை மிதித்துக்கொன்ற லேடன் என்ற காட்டு யானை உயிரிழப்பு..!

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா பகுதியில் இருக்கும் மக்களை லேடன் என்ற காட்டு யானை அச்சுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள 5 பேரை லேடன் மிதித்து கொன்றது.
இதனால் லேடன் யானையை பிடித்து காட்டில் விடுமாறு மக்கள் அறிவுறுத்தினர்.இதை தொடர்ந்து லேடன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆளில்லா விமானம் மூலம் வனத்துறையினர் லேடன் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த 11-ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி லேடன் யானையை பிடித்து ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் லேடன் யானை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.பின்னர் ஓரங் தேசிய பூங்கா அதைகாரிகள் மற்றும் வனத்துறையினர் லேடன் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.