குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தனது கணவர் முன்பு பெண்ணாக இருந்தவர் என்பதை மனைவி கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷீத்தல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரைத் திருமணம் செய்துகொண்டபோது, தன் கணவன் முன்பு ஒரு பெண்ணாக இருந்ததார் என்பதை என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
வதோதராவைச் சேர்ந்த 40 வயதுப் பெண், 2014ஆம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் ஆணாக மாறுவதற்காக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்றும் ஷீத்தல், கோத்ரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக விஜயதா என்ற ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் விராஜ் வர்தனுக்கு எதிராக மோசடி மற்றும் இயற்கைக்கு எதிரான உடலுறவு குறித்த புகாரை அவர் போலீசில் ஷீத்தல் அளித்துள்ளார்.
விராஜ் வர்தனை தான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமண தளம் மூலம் சந்தித்ததாகவும், பிப்ரவரி 2014 இல் தாங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம் என்றும் ஷீத்தல் போலீசாரிடம் கூறினார்.
ஜனவரி 2020 இல், அவர் உடல் பருமனை குறைக்க பேரியாட்ரிக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய கொல்கத்தாவுக்கு செல்ல இருப்பதாக ஷீத்தலிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் உண்மையில் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சைக்காகச் சென்றதாக பின்னர் தெரியவந்ததாக கூறினார்.
அவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தொடங்கியதாகவும், அதைப் பற்றி யாரிடமாவது கூறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு டெல்லியில் இருந்து வதோதராவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்” என்று கோத்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் கே குர்ஜார் கூறினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…