அதிகரிக்கும் கொரோனா.! இன்று முதல் பெங்களூருவில் ஒரு வாரம் முழு ஊரடங்கு .!

பெங்களூருவில் இன்று இரவு 8 மணி முதல் ஜூலை 22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூரு நகர்ப்புற பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் ஜூலை22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை கர்நாடகாவில் 38,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,409 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 684 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025