மாரடைப்பு ஏற்பட்ட முதியவரை நொடி பொழுதில் காப்பாற்றிய இளம் பெண் மருத்துவர்.!

Female Doctor

டெல்லி : விமான நிலையத்தின் டெர்மினல் 2ல் உள்ள உணவு கோர்ட்டில் 60 வயது முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டவுடன் அவர் தரையில் விழுந்தார். அப்பொழுது, ​​அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர் இதனை அறிந்தவுடன், உடனடியாக சிபிஆர் (கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன்) கொடுத்து முதியவரின் உயிரைக் காப்பாற்றினார்.

தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் மருத்துவர் முதியவருக்கு சிபிஆர் கொடுக்க ஆரம்பித்தார். சுமார் 5 நிமிடமாக முதியவருக்கு சிபிஆர் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

பெண் மருத்துவரின் இந்த முயற்சிக்கு பின் முதியவர் மீண்டும் மூச்சு விட ஆரம்பித்தார். இதையடுத்து முதியவருக்கு மருந்து வழங்கப்பட்டது. வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவித்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்