ஜஸ்ட் மிஸ்! ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்ட பெண்…ஷாக் கொடுத்த மின்னல்! வைரலாகும் வீடியோ!
பீகார் : இன்றய காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒரு சிலர் ரீல்ஸ் மீது இருக்கும் அதிக ஆர்வத்தால் ஆபத்தை உணறாமல் ரீல்ஸ் எடுப்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிர்தப்பிப்பது உண்டு. அப்படி தான் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் மாடியில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த சமயத்தில் மின்னல் தாக்குதலைத் தவிர்த்து காயமில்லாமல் தப்பினார்.
இந்த சம்பவம், அவருடைய தொலைபேசியில் உள்ள கேமராவில் பதிவாகியது. பீகாரில் கனமழை பெய்து வந்த நிலையில், பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு வேகமாக தனது வீட்டின் மாடியில் ஏறிக்கொண்டு மழையில் ரீல்ஸ் செய்து போட்டால் நன்றாக லைக் வரும் என எண்ணி மழையில் நடனம் ஆட தொடங்கினார்.
அந்த சமயத்தில் மழை மிகவும் வேகமாக பெய்து வந்த நிலையில், திடீரென சிவப்பு நிறத்தில் மின்னல் அடித்தது. இதனை பார்த்த அந்த பெண் வேகமாக தப்பி ஓடினார். அந்தப் பெண்ணின் பின்புறத்தில் வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கியது. இதனால், அலறி அடித்த ஓடிய அந்த பெண் போனை எடுக்காமல் ஓடினார்.
எனவே மின்னல் தாக்கிய அந்த வீடியோ போனில் பதிவான நிலையில் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Reels nahi rukni chahiye.💃🙂
📍Sitamarhi, Bihar#LighteningStrike #Thunder ⚡🌩️ pic.twitter.com/9b1i9YDzNo— NITESH (@Nitesh805181) June 26, 2024
மேலும், ஒரே நாளில், பீகாரில் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி குறைந்தது 8 நபர்கள் பலியானார்கள். PTI படி, பாதிக்கப்பட்டவர்களில் பாகல்பூர் மற்றும் முங்கரில் 2 நபர்களும், ஜமுய், கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.