ஹரியானா : மாநிலம் சோனிபட்டில் உள்ள கனூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், பெண் ஒருவர் வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த காளை ஒன்று திடீரென தாக்கியது. காளை தாக்கியதில் பெண் பலத்த காயம் அடைந்தார். பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
வீடியோவில் சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. அந்த பெண் தனது வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளை அமைதியாக சுத்தம் செய்து கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிந்தது. ஒரு மரத்தின் அருகே ஒரு வழிதவறிய காளை அவளுக்குப் பின்னால் நிற்பதையும் கூட வீடியோவில் காணலாம்.
பிறகு அமைதியாக நின்று கொண்டிருந்த அந்த காலை திடீரென்று அந்தப் பெண்ணின் பின்னால் பெண்ணை அதன் தலையை விட்டுத் தூக்கி எறிந்தது. இதில் அந்தப் பெண் சாலையில் சரிந்து கீழே விழுந்தால். அந்த பெண் எழுந்திருக்க முன், காளை மீண்டும் ஒருமுறை தூக்கி எறிந்தது. இதனை பார்த்த மற்ற காளைகளும் அந்த பெண்ணிடம் நெருங்கியது.
பிறகு இரண்டு காளைகளும் சண்டைபோட்டு கொண்டு இருந்த நிலையில், அந்த பெண்ணை குடும்ப உறுப்பினர் வீட்டில் இருந்து வேகமாக ஓடி வந்து பெண்ணை தூக்கி கொண்டு சென்றார். காலை முட்டியதில் காயம் அடைந்த அந்த பெண் மயக்கத்துடன் நடந்து செல்வதும் வீடியோவில் காணலாம். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…