உயிருடன் ஆமையை எரித்த விவகாரம்! 2 பேரை கைது செய்த போலீசார்!

உத்தரபிரதேசம் : சமீபத்தில் சமூக ஊடகங்களில் இரண்டு பேர் உயிருடன் ஆமை ஒன்றை தீ வைத்து எரித்த அதிர்ச்சியான வீடியோ வைரலாகி இருந்தது. வீடியோவில் தீ வைத்து எரிக்கும் போது ஆமை துடி துடித்து உயிரிழந்த காட்சி பலரையும் கண் கலங்கவும் வைத்தது. இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், உடனடியாக காவல்துறையினர் நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.
விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல்களின்படி, தியோபந்தின் ராஜுபூர் பகுதியில் உள்ள ரான்சுவா கிராமத்தில் இருவரும் இந்த சம்பவத்தை செய்துள்ளதாகவும், குற்றவாளிகள் ஆகாஷ் மற்றும் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்து இருக்கிறது.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யப்பட்டதாகவும், ஆதாரங்கள் இருந்தபோதிலும் விரைவில் அவர்களை விடுவித்ததாகவும் செய்திகள் பரவியது. ஆனால், உண்மை என்னவென்றால், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தினர்.
இருவரையும் போலீசார் விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இரு நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சஹாரன்பூர் எஸ்பி தேஹத் சாகர் ஜெயின் தெரிவித்தார். உயிரோடு இருந்த ஆமையை நெருப்பை வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025