வணக்கம் டா மாப்ள ஸ்கூட்டில இருந்து! ஷாக் கொடுத்த பாம்பு..வைரலாகும் வீடியோ!

கேரளா : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலே பாம்புகள் அமைதியாக இருக்கும் இடங்களை தேடி சென்று அதில் பதுங்கிக்கொள்வது உண்டு. ஒரு சில சமயங்களில் நாம் அணியும் ஷூக்குள், பைக் ஹெட்லைட் டூம்கள் மற்றும் ஹெல்மெட் போன்றவைக்குள் புகுந்துவிடும். அப்படி தான் கேரளாவில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மழை பெய்துகொண்டு இருந்த சமயத்தில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் பாம்பு முன்பே தெரிந்துகொண்டுள்ளார். பின் தனது தொலைபேசியில் வீடியோவை ஆன் செய்து பெரிய நீளமான குச்சி ஒன்றை எடுத்து கொண்டு ஸ்கூட்டியின் பின்புற சீட்டை அப்படியே தூக்கினார். அப்போது பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு சுருண்டு இருந்தது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் எவ்வளவு பெருசு என அதிர்ச்சியுடன் பார்த்தனர். பாம்பும் பதட்டத்துடன் வெளியே ஓடும் என நினைத்த நிலையில், பாம்பு நன்றாக சுருண்டு படுத்தது. இந்த வீடியோவை வைரல் வீடியோக்களை வெளியிடும் Salihkt Mullambath என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் வணக்கம் டா மாப்ள ஸ்கூட்டில இருந்து என்பது போலவும், விரியன் பாம்பின் குழந்தை அல்ல பாதுகாப்பாக இருங்கள் எனவும், வண்டியில் பெட்ரோல் முழுவதுமாக இருக்கிறது என்பதை பார்க்க பாம்பு வந்து இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025