அடடா என்ன ஒரு அற்புதம்..ஆற்றை கடக்கும் யானைகள்..பிரமிக்க வைக்கும் வீடியோ காட்சி!!
அசாம் : புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் அடிக்கடி நம்மளால் நினைத்து பார்க்க முடியாத வகையில், வனவிலங்குகளை வீடியோ எடுத்து அந்த வீடியோவை, தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு நம்மளை பிரமிக்க வைத்து விடுவார்கள். அப்படி தான், பிரம்மபுத்திரா நதியியில் கூட்டமாக யானைகள் ஆற்றை கடந்து செல்வதை ட்ரோன் கேமரா மூலம் புகைப்படக் கலைஞர் சச்சின் பரலி வீடியோ எடுத்து வெளியீட்டு இருக்கிறார்.
அஸ்ஸாமில் உள்ள ஒரு முக்கிய நதி துறைமுகமான நிமதி காட்டில் இருக்கும் பிரம்மபுத்திராவின் ஆழமான ஆற்றில் யானைகள் மற்றும் விலங்குகள் வந்து நீர் அருந்திவிட்டு குளித்து செல்வது வழக்கமானது. அப்படி தான் 100 யானைகள் சேர்ந்து கூட்டமாக குளித்து கொண்டு ஆற்றை ஜாலியாக கடந்து சென்றது. இதனை திட்டம் போட்டு ட்ரோன் கேமரா மூலம் சச்சின் பரலி என்பவர் வீடியோ எடுத்தார்.
வீடியோவில் முதலில் ட்ரோன் கேமரா மேலே இருந்து பார்க்கும்போது ஆற்றுக்குள் மீன்கள் நிறையவே கூட்டமாக இருப்பது போல் தெரிகிறது. அதன் பிறகு கேமரா கிட்டே செல்லும்போது அழகாக விளையாடி கொண்டு செல்லும் யானை கூட்டம் என்று தெரிகிறது.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் நேரில் பார்க்க முடியாத இந்த விஷயத்தை ட்ரோன் கேமரா மூலம் புகைப்படக் கலைஞர் சச்சின் பரலி வீடியோ எடுத்ததை தொடர்ந்து பலரும் அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram