நெல்லையில் இருந்து கேரளா சென்ற வாகனம் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்து! நால்வர் பலி
Accident: தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு சென்ற டெம்போ டிராவலர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More – யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு..! காரணம் இதுதான்
திருநெல்வேலியில் இருந்து கேரளாவின் இடுக்கிக்கு 20 பேர் டெம்போ டிராவலர் வாகனத்தில் சுற்றுலா சென்றனர். வாகனமானது கேரளாவின் அடிமாலி அருகே மலைப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது அங்கிருந்து கீழே கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 வயதான குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.!
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.