பெங்களூருவில் உள்ள மாகடி சாலையில் வயதானவரை பைக்கில் இழுத்துச்சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் இதேபோன்று அஞ்சலி என்ற பெண் காரில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள மாகடி சாலையில் முதியவரை இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகிவுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வயதான முதியவர் ஒருவரை சாலையில் இழுத்து செல்கிறார்.
அவரை சாலையில் சென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் விரைந்து சென்று தடுத்துள்ளார். சிறுது நேரத்தில் பைக் ஒட்டியவரை சாலையில் சென்றவர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருசக்கர வாகனஓட்டியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஒரு காரின் மீது மோதியதாகவும் அந்த காரின் டிரைவரை இழுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் கூறினார். மேலும் பைக் ஓட்டியவர் மருத்துவ பொருள்களை விற்பனை செய்யும் சாஹில் என்பது தெரியவந்தது. காயமடைந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…