கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலி.
கர்நாடகாவின் மங்களூரில் 30 வயதுள்ள ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பைக் அவரது கட்டுப்பாட்டை மீறியதால் சாலையோர கடையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஷர்பத் காட்டேவில் வசிக்கும் பிரசாந்த் என பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை காலை நடந்ததாக துணை போலீஸ் கமிஷனர் ஹரிராம் ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த இளைஞர் நீர்மர்காவில் உள்ள சேதானா எண்டர்பிரைசஸில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 10:15 அளவில் மேரிஹில்-பதவினங்கடி விமான நிலைய சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு வழிவகுத்த ஆபத்தான பாதையில் ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தாண்டி சென்ற போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து அந்த நபர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சரி பார்க்கும் பொழுது, ஒரு ஸ்கூட்டர் ஒரு பிரதான பாதையில் வந்தபோது எதிரே வந்த அந்த நபர் அதனை கடந்து செல்ல முயன்ற போதுதான் பைக் கட்டுப்பாட்டை இழந்து அபாயகரமான விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…