காஷ்மீரில் பரபரப்பு !ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி பறிமுதல்
ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக முசாபராபாத்தில் வரும் 13- ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.மேலும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.