#Breaking:அதிர்ச்சி..!இந்தியா முழுவதும் இத்தனை பேர் ‘கருப்பு பூஞ்சை’ தொற்றால் பாதிப்பா?- மத்திய அரசு தகவல்..!
இந்தியா முழுவதும் ‘கருப்பு பூஞ்சை’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது.இதனால்,நாளுக்கு நாள்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மிகவும் கடினப்பட்டு குணமடைந்தவர்களுக்கு,அடுத்தகட்ட சவாலாக ‘பிளாக் ஃபங்க்ஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.இந்த தொற்றால் ,கண்,மூக்கு,காது,தாடை உள்ளிட்ட பகுதியில் வீக்கம்,தலைவலி மற்றும் மூக்கில் ரத்தம் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.மேலும்,சிலருக்கு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
இந்நிலையில்,இந்தியா முழுவதும் ‘கருப்பு பூஞ்சை’ தொற்றால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை குறித்து மாநில வாரியாக உள்ள தகவலை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி,குஜராத் மாநிலத்தில் 2,281க்கும்,மகாராஸ்டிராவில் 2000 பேருக்கும்,ஆந்திராவில் 910 பேருக்கும்,மத்தியப்பிரதேசத்தில் 720 பேருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும்,
இதனைத் தொடர்ந்து,தமிழகத்திலும் 48 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும்,இதனால்,இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றால் மொத்தம் 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்,கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இதுவரை 23680 குப்பிகள் ‘ஆம்போடெரிசின் மருந்துகள்,’ அனுப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.