#Breaking:ஒமைக்ரான் பரவல்:இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு!
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் நோக்கில் மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி,தற்போது வரை இந்தியாவில் 32 பேருக்கு ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக,மும்பையில் 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் நோக்கில் மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில்,மும்பையில் இத்தகைய தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
Maharashtra: Section 144 CrPC imposed in Mumbai on 11th and 12th December, in wake of #Omicron cases in the state. Rallies/morchas/processions etc of either persons or vehicles prohibited.
The state has a total of 17 Omicron cases so far.
— ANI (@ANI) December 11, 2021