ஆந்திராவில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து! 3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

Massive Fire Breaks

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்ஷி நகரில் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தர்ஷி நகரில் உள்ள அபி ஷாப்பிங் மாலில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் ஷாப்பிங் மாலில் இருந்த ஆடைகள் உள்பட ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தற்போது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த சம்பவத்தில் இதுவரை காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கே பித்ரகுண்டா கிராமத்தில் 25 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபோன்று தேசிய நெடுஞ்சாலை 16ல் ஹைதராபாத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்