திருமணம் மீறிய உறவு.! மனைவி குழந்தைகளை கொன்ற தெலுங்கானா உதவி பேராசிரியர்.!
திருமணம் மீறிய ஓர் உறவில் வாழ்வதற்காக தெலுங்கானா தனியார் கல்லூரி பேராசிரியர் தனது குடும்பத்தையே விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கங்காதராவை சேர்ந்த வெமுலா ஸ்ரீகாந்த் என்பவர் கரீம்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மம்தா எனும் மனைவி, அமுல்யா எனும் 5 வயது மகள் மற்றும் அத்வைத் எனும் 20 மாத குழந்தை இருந்தனர்.
இவரது குழந்தைகள் மற்றும், மனைவி சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இது குறித்த சந்தேகத்தின் பெயரில் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையின் பெயரில் ஸ்ரீகாந்தின் மகன், மகள் , மனைவி உடல்கள் பிரேத பரிசோதனை செய்த போது அவர்கள் மூவர் உடலிலும் ஒரே மாதிரியான விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், ஸ்ரீகாந்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், அவருடன் வாழ்வதற்கு தடையாக இருந்த தனது மனைவி குழந்தைகளை யாருக்கும் சந்தேகம் வராதபடி சிறுது சிறிதாக விஷம் கொடுத்து ஏதோ மர்ம நோயினால் உயிரிழந்துவிட்டார்கள் என ஸ்ரீகாந்த் நாடகமாடியதும் தெரிவியவந்துள்ளது. மனைவி குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த போது பலரிடம் சமூக வலைத்தளம் மூலம் ஸ்ரீகாந்த் உதவியும் கேட்டும் இருந்துள்ளார். இந்த விவரங்களை காவல்துறையினர் கண்டறிந்ததும், விஷம் குடித்து கல்லூரி பேராசிரியர் ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட்டார்.