1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை., ஆசிரியரை அடித்து துவைத்த ஊர்மக்கள்!

புதுச்சேரி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை அப்பகுதி மக்கள் அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Puducherry Child abuse case

புதுச்சேரி : புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்ற பிறகே சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அப்பகுதி ஊர்மக்கள் நேற்று (பிப்ரவரி 14) மாலை திரளாக தனியார் பள்ளிக்கு சென்று அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும், பள்ளியையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆசிரியரை மீட்டு அங்குள்ள பொதுமக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதன் பிறகு ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவளக்குப்பம் பகுதி மக்கள் நேற்று இரவு புதுச்சேரி – கடலூர் சாலையில் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 4 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் :

இச்சம்பவம் குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். தற்போது பள்ளிக்கு சீல் வைக்க உள்ளோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கையையும் எடுப்போம். மொத்த பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்.” என கூறினார்.

காவல் அதிகாரி :

காவல்துறை சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி,  ” சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் யாரும் இன்னும் புகார் கொடுக்கவில்லை. இல்லைஎன்றாலும் போலீஸ் தரப்பில் நாங்களாக முன்வந்து புகார் பதிவு செய்து கொள்வோம். சில இடங்களில் போலீஸ் தவறாக நடந்தாதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் விசாரிப்போம். இன்னும் பாதிக்கப்பட்ட குழந்தையை நாங்கள் பார்க்கவில்லை. அவர்கள் தனியார் மருத்துவமனையில் மருத்துவ சான்று பெற்றுள்ளனர். நாங்கள் அரசு சார்பில் மருத்துவ சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும். ” என தெரிவித்தார்.

தற்போது வெளியான தகவலின்படி தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் பிடித்து கொடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்