ஒடிசாவில் தொடரும் ரயில் விபத்துக்கள்… ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து.!
ஒடிசாவில் துர்க் – பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம் நவபாடா மாவட்டத்தில் துர்க் – பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த எக்ஸ் பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள்ளது. மேலும், பிரேக் பிடிக்கையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அடுத்ததாக ஜாஜ்பூர் பகுதியில் சரக்கு ரயில் திடீரென நகர்ந்த காரணத்தால் மழைக்கு ஒதுங்கிய 6 தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.