விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட திடீர் விரிசல்…நடுவானில் இருந்து அவசரமாக தரையிரக்கம்..!
சவுதியா ஏர்லைன்ஸின் விமானத்தின் கண்ணாடியில் நடுவானில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக தரையிரக்கப்பட்டுள்ளது.
சவுதியா ஏர்லைன்ஸின் சரக்கு விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக விமானி தெரிவித்ததையடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கொல்கத்தா விமான நிலையத்தில் மதியம் 12:02 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் துபாய் செல்லும் ஃபெட்எக்ஸ் (FedEx) விமானம் புறப்பட்ட உடனேயே பறவை ஒன்று மோதியதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.