ரூ.4 லட்சம் செலவு! காருக்கு இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட வினோத சம்பவம்.!

குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தான் 12 வருடம் பயன்படுத்திய காருக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.

Car With Burial Ceremony

குஜராத் : பொதுவாக, ஒரு மனிதன் இறந்த பிறகு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்வது வழக்கம். அதேபோல், நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளும் இறக்கும் போது, ​​அவற்றை அன்புடன் வளர்த்தவர்களும் அவ்வாறு செய்வதை  பார்த்திருக்கிறோம்.

நீங்கள் எப்போதாவது ஒரு காருக்கு இறுதிச்சடங்கு செய்வதை பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அட ஆமாங்க… குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் போலாரா என்பவர், 12 ஆண்டுகளாக பயன்படுத்திய தனது லக்கி காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி, நல்லடக்கம் செய்துள்ளார்.

இச்சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்க்கையில் பல நல்வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் இந்த கார் தந்ததாக கருதி அதனை, 1500-பேர் முன்னிலையில் தனது விவசாய நிலத்தில் நல்லடக்கம் செய்துள்ளார். இந்த நிகழ்வுகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த அதிர்ஷ்ட காரின் இறுதிச் சடங்கிற்காக குஜராத்தி குடும்பம், முறைப்படி எப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது என்பதைப் பாருங்கள். இதோ அந்த வீடியோ…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்