அமெரிக்காவில் நிறுவப்பட்ட 45 டன் எடை கொண்ட அனுமான் சிலை.!

Default Image

தெலுங்கனாவில் இருந்து அமெரிக்காவிற்கு 45 டன் எடை கொண்ட அனுமான் சிலை கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள ஹொக்கசின் டெலாவேர் என்ற இடத்தில் அனுமன் சிலை ஒன்று 25 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது, மேலும் டெலாவேர் இந்து கோவில் சங்கம் இந்த சிலையை தெலங்கானாவில் இருந்து வரவழைத்து அமெரிக்காவில் உள்ள கோவில் அருகே நிறுவி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கப்பலில் ஏற்றப்பட்ட இந்த 25 அடி அனுமன் சிலை தற்பொழுது அமெரிக்கா சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவிலேயே இந்த அனுமான் சிலை தான் உயரமான இந்து கடவுளின் சிலை என்ற பெருமையும் பெற்று, இரண்டாவது உயரமான வழிபாடு தொடர்பான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இது குறித்து கோவில் சங்கத்தின் தலைவர் டெலாவேர் இந்து பதிபந்தா சர்மா அவர்கள் கூறியது இந்த சிலையின் எடை சுமார் 45 டன்கள். இது தெலங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்த இந்த 25 அடி அனுமன் சிலை யை உருவாக்க அமெரிக்காவிற்கு கொண்டு சேர்க்கவும் இந்திய மதிப்பின் படி சுமார் 76 லட்சம் செலவானதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த சிலையை கருப்பு நிற கிரானைட்டில் இருந்து செதுக்கப்பட்டதாகவும், சிலையை உருவாக்க ஒரு வருட காலம் ஆனதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்